பிரம்மா குமாரிகள் ஸ்தாபனத்தின் சாஸனம் இதன் உயரிய விருப்பங்கள் மற்றும் நோக்கங்களின் விரிவான ஒரு பார்வை
-
சமூகத்தில் தனி நபரின் பங்கு மற்றும் சுய வாழ்வின் குறிக்கோள் பற்றி நன்கு புரிந்து கொள்வதை ஊக்குவிப்பது.
-
ஒவ்வொரு தனி நபரின் தனது ஆன்மீக அடையாளம், தன் இயற்கையான சுயத்தின் நற்குணங்கள், சுயமரியாதை, ஆத்ம தரம் ஆகியவற்றை மீண்டும் உறுதி செய்தல்.
-
தனி மனித சுபாவம், கண்ணோட்டம், நடத்தை ஆகியவற்றில் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்துவது.
-
உலகளாவிய சகோரத்துவ உணர்வை வளர்த்தல், மேலும் மனிதர்களின் இன்றைய நிலையை உயர்வடைய ஊக்குவித்தல்.
ஒரு பாரம்பரிய உலக சேவை
உலகில் மனித குலத்தின் ஆன்மீக சேவையே, பிரம்மா குமாரிகள் நடத்தும் வகுப்புகளின் ஆதாரமாகும். 1969ல் இந்த இயக்கத்தை ஸதாபனை செய்தவரின் மறைவுக்கு பிறகு உலக அரங்கத்தில் காலடி வைத்தது, ஏறக்குறைய கடந்த 49 ஆண்டுகளாக ஆரோக்கியம், தலைமைதாங்கி வழிநடத்துதல், ஊடகம், கல்வி, சுற்றுப்புற சூழ்நிலை, சமூக சேவை மேலும் பலதுறைகளில் பிரம்மா குமரிகளின் உலகளாவிய தீவிர முயற்சி பல்வேறுபட்ட சூழ்நிலைகள், மாறுபட்ட கலாச்சாரங்கள், பலவித வாழ்க்கை நிலையில் வாழ்ந்து வருகின்ற மனிதர்களின் ஆன்மீக வளர்ச்சியை ஊக்குவித்து வருகிறது.
ஆன்மீகமும் தனி நபரின் மனமாற்றமும்
பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் மாணவர்கள் தங்கள் உலகீய வாழ்க்கையில் தன் வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருக்கும் போதும், தங்களின் உள்மனதில் ஆன்மீக பிரயாணம் செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள். இதன் மூலம், உலகில் உள்ள அனைவருக்கும் தன் தூய அதிர்வலைகளால் ஆழ்ந்த அமைதியும், மனநிறைவும் மற்றும் மகிழ்ச்சியையும் அனுபவம் செய்ய முடியும் என்ற ஓர் ஆழ்ந்த உள்ளுணர்வு கொண்டுள்ளனர்.
இராஜயோகம்…. ஒரு புதிய ஆன்மீக பயணம்
பிரம்மா குமரிகளின் போதனைகள், அனைத்து மதங்களுக்கும் அப்பாற்பட்டு, ஆன்மீக அனுபவத்திற்கு, நடைமுறைக்கு சாத்தியமான அணுகுமுறைக்கு வழிகாட்டுகின்றது. தற்சமயம் சாதனங்கள் நிறைந்த வாழ்க்கையில் ஈர்ப்பும், ஈடுபாடும் குறைந்து வருவதால், ஒரு காலத்தில் மேற்கத்திய கலாச்சாரத்தில் சாத்தியமில்லை என்று நினைக்கப்பட்ட அதிகாலையில் எழுந்து தியானம் செய்வது, சைவ உணவை ஏற்பது, பிரம்மச்சரியத்தை கடைப்பிடிப்பது போன்ற பழக்கங்கள் இப்போது மக்களால் அதிக அளவில் எற்றுக்கொள்ளப்படுகிறது.
நோக்கம்
பிரம்மா குமாரிகள் ஆன்மீக மனமாற்றம் மற்றும் உலக சேவைக்காக, தங்களை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டுள்ளனர். சமூக வலை தளங்களில், நாங்கள் யார் ? என்ன செய்கிறோம் ? எங்களின் ஆன்மீக பொறுப்பு ஆகியவற்றை தெளிவாக காணலாம். இந்த வலை தளங்களில் brahmakumaris.org, brahmakumaris.com-ல் இந்த இராஜயோக தியானத்தின் ஆன்மீக ஞானத்தை ஆழமாக புரிய வைத்தல், நடைமுறைப்படுத்துதல் பற்றி கூறப்பட்டுள்ளது. இந்நிறுவனம் ஏறத்தாழ 9800 க்கும் மேற்பட்ட சேவை நிலையங்கள், கிளை சேவை நிலையங்கள் மற்றும் கீதா பாடசாலைகளின் மூலம் உலகம் முழுவதும் அயராது ஆன்மீக சேவை செய்து வருகின்றன.
எளிமையான தொடக்கம்
1937ல் பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் தாதா லேக்ராஜ் கிருபிலானி என்ற ஒய்வு பெற்ற வைர வியாபாரியால் பிரம்மா குமாரிகள் இயக்கம் ஸ்தாபனை ஆகியது. இவரின் ஆன்மீக பெயர் ‘பிரஜா பிதா பிரம்மா’ இவர் ‘பிரம்மா பாபா’ என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். 1936ல் பல்வேறு காட்சிகளைக் கண்ட இவர் உயர்ந்த கொள்கைகளும், உயர்ந்த பண்புகளும், தியானமுறை வாழ்கையையும் சொல்லிக் கொடுக்கும் ஒரு பள்ளியை துவக்கத் தூண்டப்பட்டார். அந்த பள்ளியின் பெயர் ‘ஓம் மண்டலி’. இங்கு சில ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஒரு குழுவாக தங்கியிருந்தனர்.
இப்பள்ளி 1950ம் வருடத்திற்கு பிறகு கராச்சியிலிருந்து, இராஜஸ்தான் மாநிலம் ஆரவல்லி மலை தொடரின் அபுமலையில் தன் ஆன்மீக சேவையை தொடர்ந்தது. இது ‘பிரஜா பிதா பிரம்மா குமரிகளின் ஈஸ்வரிய உலக பல்கலைக்கழகம்’ என்று அழைக்கப்பட்டது. இதன் தலைமையகம் ‘மதுவனம்’ என்று அழைக்கப்படுகிறது. ‘மதுவனம்’ என்றால் ‘தேன்வனம்’ என்று பொருள்.
ஆன்மீக கல்வி, இராஜயோக தியானம் மேலும் சுயமாற்றத்திற்காக சுமார் 400 மாணவர்கள் 1950ல் அபுமலையில் தன் முழுநேரத்தையும் ஆர்வத்துடன் ஈடுபடுத்தினர்.
இயக்கத்தின் ஸ்தாபகர் பிரம்மா பாபா
1880ல் லேக்ராஜ் கிருபிலானி (பிரம்மா பாபா) ஒரு கிராம பள்ளி ஆசிரியரின் மகனாக பிறந்தார். இந்துமத வழிப்படி வளர்க்கப்பட்டார். இவர் பல்வேறு தொழில்கள் செய்து, பின் கடைசியில் சிறந்த பெரிய வைர வியாபாரி ஆனார். அவருக்கு ஐந்து குழந்தைகள். 1936ல் பல ஆன்மீக அனுபவங்களும், காட்சிகளும் தொடர்ச்சியாகக் கிடைக்கப் பெற்றதால், தன் வியாபாரத்தை விட்டுவிட்டு பிரம்மா குமாரிகள் உலக ஆன்மீக பல்கலைக் கழகத்தை தொடங்கினார். 1937 – 1938-ல், எட்டு இளம் பெண்களை கொண்ட ஒரு நிர்வாகக் குழுவை அமைத்தார். இந்த குழு மூலம் டிரஸ்ட் ஒன்றை அமைத்து, தன் சொத்துக்கள் அனைத்தையும் அர்ப்பணம் செய்தார்.
ஏராளமான பிரம்மா குமாரிகள் சேவை நிலையங்கள் அமைத்த பிறகு 1969-ம் ஆண்டு ஜனவரி மாதம் 18 -ம் தேதி தன் பூவுடலை நீத்தார். மதுவனத்தில் உள்ள ‘சாந்தி ஸ்தம்பம்’, மனித வாழ்க்கையின் உண்மை நிலைகளை கண்டறிந்த இந்த மகானுக்கு என்றும் வணக்கம் தெரிவிக்கிறது.
1936-லிருந்து இன்று வரை இலட்சக்கணக்கான மனிதர்கள் இந்த ஆன்மீக சேவையை உலகம் முழுவதும் செய்து வருகின்றனர். ஆரம்ப காலத்தில் சிறு குழந்தைகளாக இருந்த பிரம்மா குமாரிகள், இப்பொழுது தங்களின் 90 மற்றும் 100 வயதில் அன்பு, அமைதி, ஆன்மீக ஞானம் நிறைந்த தாதிகளாக உலகிற்கு தனது மகத்தான சேவை செய்யும் கலங்கரை விளக்கங்களாக விளங்குகின்றார்கள்.